தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வெளிமாநிலங்களில் இருந்து கண்டெய்னர் டேங்குகளிலும், லாரிகள் மூலமாகவும் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 84.99 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கண்டெய்னர்கள் மூலம் ரயிலில் சென்னைக்கு வந்தது. ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோவில் இருந்து இந்த ஆக்சிஜன் கண்டெய்னர் சரக்கு ரயில் நேற்று இரவு சென்னை திருவொற்றியூர் கான்கார் கண்டெய்னர் யார்டுக்கு வந்தடைந்தது. அவை அங்கிருந்து லாரிகள் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அரசு சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.