ஜூன் 1 முதல் 11 வரை 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.என். செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜூன் 1 முதல் 11ஆம் தேதி வரையிலான சிறப்பு அமர்வுகளை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மிக முக்கிய வழக்காக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மட்டுமே விசாரிக்க ஜூன் 1 முதல் 11 தேதி வரை சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளது
சென்னை:
அனைத்து நாட்களிலும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு செயல்படும்
அதைத்தவிர சென்னையில் ஜூன் 1 முதல் 3 தேதி வரை, 4 முதல் 8 தேதி வரை, 9 முதல் 11 தேதி வரை தலா 7 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள்
இரு நீதிபதிகள் கொண்ட 2 அமர்வுகள் தனி நீதிபதி கொண்ட 3 அமர்வுகள் என்ற வகையில் வழக்குகள் விசாரிக்கப்படும்
மதுரை:
மதுரையில் ஜூன் 1 முதல் 7 தேதி வரை, 8 முதல் 11 தேதி வரை தலா 7 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள்.
இரு நீதிபதிகள் கொண்ட 2 அமர்வுகள் தனி நீதிபதி கொண்ட 3 அமர்வுகள் என்ற வகையில் வழக்குகள் விசாரிக்கப்படும்.
ஜாமீன் மனுத்தாக்கல் விதிகள்:
ஏற்கனவே ஜாமீன் மனு தள்ளுபடி ஆகியிருந்தால் அதே நீதிபதி முன்புதான் மீண்டும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்
ஜாமீன் ரத்து கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களும் ஏற்கனவே ஜாமீன் வழங்கிய நீதிபதி முன்பாகத்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும்.