மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவில் பெண்களுக்கான கோப்பை போட்டியில் சிவகங்கை மாவட்ட பெண்கள் அணி முதல் பரிசை வென்றது.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவில் பெண்களுக்கான கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இருந்து 24 பெண்கள் அணிகள் மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்றது.
போட்டிகள் அனைத்தும் நாக்–அவுட் முறையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிவகங்கை மாவட்ட பெண்கள் அணியும் தேனி மாவட்ட பெண்கள் அணியும் மோதியதில் சிவகங்கை மாவட்ட பெண்கள் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
இதில் பங்கேற்ற தமிழக வருவாய்த்துறை அமைச்சர் வாழும் R. P. உதயகுமார் அவர்கள் இறுதிப் போட்டியை துவக்கி வைத்து பின்பு வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. இரவீந்திரநாத் பங்கேற்றணர்.
மேலும் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கிய தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் R.P. உதயகுமார் பேசுகையில் தமிழகத்தை ஆட்சி செய்யும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இருவரும் தமிழகத்தில் ராமனும் லட்சுமணனும் ஆக இருந்து செயல்படுவதாகவும்,
இதில் இருவருமே ராமனும் லட்சுமணனும் இருந்து தமிழகத்தை காப்பாற்றி வருவதாக உதயகுமார் பேசினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தேதலில் அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என கேட்ட கேள்விக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து உரிய விளக்கம் அளித்து விட்டார் என தெரிவித்ததோடு,
அது குறித்து தான் விளக்கம் கூற தகுதி இல்லை எனவும் தெரித்தார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் விடியல் நோக்கி பயணம் குறித்து கேட்ட போது திமுக தலைவர் ஸ்டாலின் விடியல் தெரியாமல் விடியலை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தந்தை காலத்தில் இருந்து விடியல் தெரியாமல் இருந்து வருவதாக தெரிவித்தார். தேவந்திரகுல வேளாளர் குறித்து கேட்ட பொது பதில்ளிக்க மறுத்துவிட்டார்.