ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்….ரிலீஸ் தேதி இதோ

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகி உள்ள தலைவி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

மதராசபட்டினம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் .எல். விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், இந்தி என பல்வேறு மொழிகளில் பான் இந்திய படமாக இந்த படம் உருவாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரும் தமிழ் சினிமா நடிகையுமான ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் .எல். விஜய் இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி உள்ள தலைவி படம் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக புதிய ரிலீஸ் மோஷன் போஸ்டருடன் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். வரும் ஏப்ரல் மாதம் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் கடும் போட்டி நிலவும் என தெரிகிறது.

பாலிவுட் இயக்குநர்களையும், நடிகர்களையும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி உள்ள தலைவி படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி உள்ள தலைவி படத்தின் பிரத்யேக புதிய ஸ்டில்களை படக்குழு வெளியிட்டு வைரலாக்கி வருகிறது. இந்த படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். சமுத்திரகனி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!