ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா அன்று மாரடைப்பால் இறந்த இருவருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – எடப்பாடி அறிவிப்பு

சென்னை,

ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழாவில் பங்கேற்று ஊர் திரும்பும்போது, மாரடைப்பு, சாலை விபத்தில் இறந்த கட்சியினர் இருவருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுசம்பந்தமாக அண்ணா தி.மு.. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான .பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது

கடந்த 27–ந் தேதி நடைபெற்ற, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த, திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், நத்தம் வடக்கு ஒன்றியம், சிறுகுடி ஊராட்சி, இந்திராநகர் கிளைக் கழகத்தைச் சேர்ந்த கே.மூக்கன் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும்,

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், வேங்கைகுறிச்சி ஊராட்சி, மாராச்சிரெட்டிப்பட்டி கிளைக்கழக அவைத்தலைவர் .மாரியப்பன், புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பும்போது விபத்துக்கு உள்ளாகி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும்,ஆற்றொணாத் துயரமும், மனவேதனையும் அடைந்தோம்.

அன்புச் சகோதரர்கள் மூக்கன், மாரியப்பன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் மறைந்த மூக்கன், மாரியப்பன் ஆகியோரது குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 

One thought on “ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா அன்று மாரடைப்பால் இறந்த இருவருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – எடப்பாடி அறிவிப்பு

Comments are closed.

Translate »
error: Content is protected !!