டாடா காப்பி  தொழிற்சாலை நிறுவனத்தில் 5வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  வைகைஅணை சாலையில்  டாடா காப்பி தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தில் நிறந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வட்டியில்லா கடனுதவி, பள்ளி குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தொழிலாளர்கள் கடந்த 4 மாதங்களாக டாடா காபி நிர்வாகத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக கடந்த 5 நாட்களாக  கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை முதல் வெளி மாநிலத்தில் இருந்து பணியாளர்களை அழைத்து வந்து பணிகளை துவக்க இருந்த நிலையில் போராட்டத்தில் இருந்த பணியாளர்கள் டாட்டா காப்பி தொழிறாலை முன்பாக வெளி மாநில பணியாளர்களை வெளியேற்ற கோரி இரவில் தர்ணா பொராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த  இந்நிலையில் இதனை அறிந்த தேவதானபட்டி காவல்துறையினர் தொழிற்சாலை நிர்வாகத்திரனரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் அழைந்து வந்த பணியாளர்களை வெளியேற்றுவதாக கூறினர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகையில் ஆழையில் முன் அனுபவம் இல்லாத தொழிலாளர்கலை கொண்டு ஆழையை இயக்க நேரிட்டால் ஆலையில் உள்ள அமோனியம் என்றும் விவச வாயு வெளியேறினால் ஆழையை சுற்றி உள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் என தெரிவிப்பதோடு ஆழை நிர்வாகம் தொழிலாளர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி பணியாளர்களின் நியாமனா கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Translate »
error: Content is protected !!