டிக் டாக் செயலியை மூடியதால் டிக் டாக் புகழ் சூர்யா என்கிற சுப்புலட்சுமி புரோக்கர் மூலமாக விபச்சார தொழிலில் ஈடுபட்ட பரிதாபம்.
திருச்சி மாநகரில் மஜாஜ் மையம் என்கிற பெயரில் விபச்சாரத்தில் தொடர் சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர், 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திருச்சி தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஸ்பாக்களில் விபச்சாரம் நடப்பதாக தகவல் வந்ததையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விபச்சாரத் தொழிலில் ஈடுபடுபவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் இன்று வேதா, ஆர்ச்சர்டு உள்ளிட்ட ஐந்து சென்டர்களில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் அங்கு விபச்சாரம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டு அதன் உரிமையாளர்கள் மற்றும் புரோக்கர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட 13 பெண்களை போலீசார் மீட்டனர். அந்த 13 பேரில் ஒருவர் தான் டிக்-டாக் சூர்யா எனப்படும் சுப்புலட்சுமி. சமூக வலைதளமான டிக் டாக் மூலம் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர் டிக் டாக் சூர்யா. சூர்யா சில மாதங்களுக்கு முன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்று மீண்டு வந்தார்.
இந்த நிலையில்தான் டிக் டாக் மூலம் சம்பாதித்தாலும் அந்த செயலியை தடை செய்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த டிக் டாக் சூர்யா திருச்சியில் அவரை புரோக்கர்கள் விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர். போலீசாரால் மீட்கப்பட்ட சூர்யாவிற்கு திருச்சி அரசு மருத்துவமனையில் RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இன்று அதிகாலை தனியார் தொலைக்காட்சி நடிகை சித்ரா இறந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சாதாரணமான இறப்பு கிடையாது இதற்கு போலீசாரும் தமிழக அரசும் உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோவை வலை தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
VIDEO: