இன்றைய கூட்டத்தொடரின்போது , அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதை போல டீசல் விலையும் குறைக்கப்படலாமே .. ஏன் குறைக்கப்படவில்லை..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது,
பெட்ரோல் விலை குறைப்பால் இருசக்கர வாகன ஓட்டிகள், மற்றும் சிறிய ரக கார்கள் பயன்படுதோவர் என 2 கோடி பேர் பயனடைந்துளனர். டீசல் விலை குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக கிடைக்குமா என்று சொல்ல முடியாது. மேலும் டீசல் வாகனங்கள் பயன்படுத்துவோருக்கு பல வழிகளில் சலுகைகள் வழங்கப்படுகிறது என கூறினார்.
விலை குறைப்பின் நன்மைகள் குறித்த தகவல்களை சேகரிப்பதாகவும், கிடைக்கும் தகவல்களுடன் 30 நாட்களுக்குள் பயனுள்ள முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்தார்.