சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் உள்ள பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் நாகராஜன் என்பவர் “பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி” தடகள பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். பயிற்சிக்காக வந்த விளையாட்டு வீரர்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் தடகள பயிற்சியாளரான நாகராஜன் மீது 5 பிரிவுகளின் கீழ் பூக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், குண்டாஸ் சட்டத்தின் கீழ் நாகராஜா மீது வழக்குத் தாக்கல் செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவல் உத்தரவிட்டுள்ளார்.