தடையை மீறி பேரணி சென்ற திமுக எம்பி கனிமொழி உள்பட 191 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு

ஆளுநர் மாளிகை நோக்கி தடையை மீறி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்ற திமுக எம்பி கனிமொழி உள்பட 191 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பேரணியில் நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிவி நடிகை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உபி மாநிலம், ஹத்ராசில் தலித் பெண் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் சென்னையில் நேற்று மாலை கவர்னர் மாளிகையை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்பட்டது. லாக்டவுனால் சென்னை நகரில் 144 தடை உத்தரவு மற்றும் இந்த பேரணிக்கு காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனையடுத்து பேரணியில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி, எம்எல்ஏ கீதா ஜீவன் உட்பட 191 பேர் மீது கிண்டி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!