தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தில் ரூ. 32 லட்சம் கையாடல் செய்த உறவினர் கைது

சென்னையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் ரூ. 32 லட்சம் பணத்தை கையாடல் செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, ஓட்டேரி, கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (64). துரைப்பாக்கம், ராஜிவ்காந்தி சாலையில் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2017ம் கொளத்துாரைச் சேர்ந்த தனது நெருங்கிய உறவினர் பிரவின்குமார் (வயது 31) என்பவரிடம் செக்யூரிட்டி நிறுவனத்தை ஒப்படைத்து நிர்வகிக்கும்படி தேவேந்திரன் கூறினார். பிரவீன்குமாரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தின் பண வரவில் குளறுபடி ஏற்பட்டதால், தேவேந்திரன் இதுகுறித்து பிரவின் குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு பிரவீன்குமார் தேவேந்திரன் மிரட்டி அனுப்பியுள்ளார். இதுகுறித்து தேவேந்திரன் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கடந்த 3 ஆண்டுகளாக பிரவீன்குமார் செக்யூரிட்டி நிறுவனத்தின் பணத்தை தனது வேறொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றி செலுத்தி சுமார் ரூ.32 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் பிரவின்குமாரை நேற்று கைது செய்தனர். அவர் விசாரணைக்குப்பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர்.

Translate »
error: Content is protected !!