தன் உடல் நலம் பற்றி 21 வருடங்களாக சொல்லாத ஒரு உண்மையை சொன்ன நடிகர் மம்முட்டி

மலையாள சினிமாவில் மம்மூட்டி ஒரு முன்னணி நடிகர். சமீபத்தில் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை திட்டத்தின் தொடக்க விழாவில் அவர் கலந்து கொண்டார். விழாவில் பேசிய மம்முட்டி, தனது இடது கால் தசை நார் சேதமடைந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறினார்.

அவர் இன்னும் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்று குறிப்பிட்டார்,.ஏனென்றால் அந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டால் கால் குட்டையாகிவிடும் மற்றும் இதைவைத்து தன்னை கிண்டல் செய்வார்கள் என்று கூறினார். 21 வருடங்களாக காலில் அறுவைசிகிச்சை செய்யாமல் இருப்பது சினிமா திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!