தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
- காய்கறி, மளிகை கடைகள் இனி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும்.
- மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர வேறு எந்த கடைகளையும் திறக்க அனுமதி இல்லை.
- காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் செயல்படுவதற்கான நேரம் குறைப்பு
- இன்று முதல் தமிழகத்தில் டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை.
- மே 17ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு உள்ளும், வெளியேயும் பயணிக்க இ பதிவு கட்டாயம்
- ஆன்லைன் மூலமான மளிகை பொருட்கள், காய்கறி விற்பனைக்கும் காலை 10மணி வரை மட்டுமே அனுமதி
- காய்கறி, பூ, பழங்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இன்று முதல் செயல்பட அனுமதி இல்லை
- மின் வணிக நிறுவனங்கள் மதியம் 2மணி முதல் 6மணி வரை மட்டுமே நாளை முதல் செயல்பட முடியும்
- திருமணம், இறப்பு உள்ளிட்டவற்றிக்கு மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இனி இ–பதிவு கட்டாயம்
- https://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்த பிறகே இனி உள்ளூர், வெளியூரில் பயணிக்க முடியும்
- பொருட்கள் வாங்க வீட்டிற்கு அருகே உள்ள கடைகளுக்கு மட்டுமே இனி செல்ல வேண்டும்
- வீட்டில் இருந்து அதிக தொலைவில் உள்ள கடைகளுக்கு செல்ல முயலும் பொதுமக்கள் இனி தடுக்கப்படுவார்கள்
- ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல் செயல்படும்
- ஏடிஎம், பெட்ரோல் பங்குகள் எப்போதும் போல் செயல்படும்
- காலை 10மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும்.