தமிழகத்தில் இன்று 11,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 23,78,298 பேர்.
சென்னையில் இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 793 பேர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,26,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 22,23,015 பேர்.
இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் இரண்டு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 43,09,720 பேர் வந்துள்ளனர்.
சென்னையில் இன்று 793 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 11,012 பேருக்குத்
தொற்று உறுதியாகி உள்ளது.இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று (ஜூன் 15) பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்
தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,25,215 பேர். மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,03,09,255 பேர். இன்று எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,70,961 பேர். மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 23,78,298 பேர். இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 11,803 பேர்.
சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 793 பேர். சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) 7,464 பேர். மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 13,92,357 பேர். பெண்கள் 9,85,903 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 6,727 பேர். பெண்கள் 5,078 பேர்.
இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 23,207 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 22,23,015 பேர். இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 267 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,068 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 7,876 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று மாநிலம் முழுவதும் 29,944 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,071 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 3,246 ஐசியூ படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.