தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு – தமிழக தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தமிழக தேர்தல் ஆணையம் வெளியி்டுள்ளது.

சென்னை,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர், டிசம்பரில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதற்காக, நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி 29 லட்சத்து 72 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, இவற்றை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கியது.

இந்த நிலையில்தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.   தமிழகத்தில் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845- வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 5.09 லட்சம் பேர் நீக்கம்; புதிதாக 21.39 லட்சம் வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!