தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் எஸ்.பி.யாக இருந்த சிபி சக்கரவர்த்தி, சென்னை சைபர் கிரைம் பிரிவின் முதல் நிலை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேப்போல் சென்னை கிழக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக, ஓம் பிரகாஷ் மீனா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பயிற்சி முடித்த இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 9 பேர், காவல் உதவி கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 2018, 2019- ம் ஆண்டில் ஐபிஎஸ் பயிற்சி முடித்த 9 ஐபிஎஸ் பணி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சந்தீஷ்- தூத்துக்குடி புறநகர் உதவி எஸ்பி. 2. ராஜத் சதுர்வேதி- நாங்குநேரி சரக உதவி எஸ்பி. அங்கித் ஜெயின்- விருத்தாச்சலம் சரக உதவி எஸ்பி. சாய் பிரனீத்- திருத்தணி சரக உதவி எஸ்பி. அபிஷேக் குப்தா- திண்டினம் சரக உதவி எஸ்பி. அருண் கபிலன்- திண்டுக்கல் புறநகர் சரக உதவி எஸ்பி. கவுதம் கோயல்- ஈரோடு பெருந்துறை சரக உதவி எஸ்பி. ஸ்ரேயா குப்தா- தேனி உத்தமபாளையம் சரக உதவி எஸ்பி. அரவிந்த்- ஓசூர் சரக உதவி எஸ்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.