பண்டிகை காலத்தை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அக். 22ம் தேதி (நாளை) முதல், இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து, பின்னர் அது தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் கடைகள் அனைத்தும் இரவு 9 மணிக்கு பிறகு இயங்கக்கூடாது என்று கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்தது.
தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து தீபாவளி வருகிறது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க ஏதுவாகவும், கடை திறப்பு நேரத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அக். 22ம் தேதி (நாளை) முதல், இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துளார்.
பண்டிகை கால தேவைகளை கருத்தில் கொண்டு இந்த அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முழு கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 10 மணிவரை இயங்கலாம் என்று முதல்ல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும், முககவசம், 6 அடி இடைவெளியில் கை கழுவுதல் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.
—