தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பெரும் அளவில் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வர உள்ளன. அந்த வகையில் தமிழக அரசு 39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது.
தமிழகக்தில் மேலும் இம்மாத இறுதிக்குள் 42.58 லட்சம் தடுப்பூசிகள் வரஉள்ளது. நாளை 63,370 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், நாளை மறுநாள் 40,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் வரவுள்ளன. இதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும் என தெறிக்கப்பட்டுள்ளது.