தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது

சென்னை,

தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 143 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 271 ஆண்கள், 183 பெண்கள் என மொத்தம் 454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 147 பேரும், கோவையில் 38 பேரும், திருவள்ளூரில் 35 பேரும், செங்கல்பட்டில் 33 பேரும் குறைந்தபட்சமாக அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 66 லட்சத்து 1,990 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 46 ஆயிரத்து 480 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 2 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12,438 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 462 பேர் நேற்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 29 ஆயிரத்து 850 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 192 பேர் உள்ளனர். நேற்று 52 ஆயிரத்து 196 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 66 லட்சத்து 1 ஆயிரத்து 990 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 27 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று 644 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 19 ஆயிரத்து 97 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அந்தவகையில் 18 ஆயிரத்து 717 பேர்கோவிஷீல்டுதடுப்பு மருந்தும், 380 பேர்கோவேக்சின்தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர்.

அதில் 14 ஆயிரத்து 446 பேர் முதல் முறையாகவும், 4 ஆயிரத்து 651 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 9 ஆயிரத்து 143 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 524 பேர்கோவிஷீல்டுதடுப்பு மருந்தும், 5 ஆயிரத்து 619 பேர்கோவேக்சின்தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!