தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் குறைவு: நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 248 பேர்க்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் நேற்றைய (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 316 ஆண்கள், 235 பெண்கள் என மொத்தம் 551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 158 பேரும், கோவையில் 69 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூர், விழுப்புரம், கிருஷ்ணகிரியில் தலா இருவரும், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கையில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பெரம்பலூரில் புதிய பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 49 லட்சத்து 71 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்களில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 323 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 477 ஆண்களும், 3 லட்சத்து 28 ஆயிரத்து 812 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 29 ஆயிரத்து 980 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 693 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 5 பேரும் என 8 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் தமிழகத்தில் 12,272 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 758 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 13 ஆயிரத்து 326 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் 5 ஆயிரத்து 725 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 68 அரசு, 184 தனியார் நிறுவனம் என 252 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து கடந்த 8-ந்தேதி முதல் நேற்று வரை தமிழகம் வந்த 518 பேரில், 360 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 299 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 59 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில

ஒரே நாளில் 10,256 பேருக்கு தடுப்பூசி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் முன்களப் பணியாளர்கள் உள்பட 10,256 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசி 10,051 பேருக்கு, கோவேக்சின் தடுப்பூசி 205 பேருக்கு போடப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த 3 நாள்களில் மொத்தம் 16,742 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்ட் தடுப்பூசி 15,975 பேருக்கு, கோவேக்சின் தடுப்பூசி 487 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!