தமிழகத்தில் கோரோனோ பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது…….1 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த பாதிப்பு விகிதத்தில் வெறும் 1 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது,  தமிழகத்தில் நேற்று 307 ஆண்கள், 216 பெண்கள் என மொத்தம் 523 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 168 பேரும், கோவையில் 48 பேரும், செங்கல்பட்டில் 37 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி, விருதுநகரில் தலா இருவரும், அரியலூர், தர்மபுரி, கரூர், திருப்பத்தூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் புதிய பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 35 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 5 லட்சத்து 5 ஆயிரத்து 151 ஆண்களும், 3 லட்சத்து 30 ஆயிரத்து 618 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 34 பேரும் அடங்குவர்.

இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 147 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 711 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனையில் தலா இருவரும் என 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

இதுவரையில் தமிழகத்தில் 12,325 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 595 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 192 பேரும், கோவையில் 69 பேரும், செங்கல்பட்டில் 51 பேரும் அடங்குவர்.

இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 742 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் 4 ஆயிரத்து 736 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பு விகிதத்தில் வெறும் 1 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 54 லட்சத்து 41 ஆயிரத்து 642 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்து 617 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 11 நாள்களில் 73,953 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 72,253 பேருக்கு கோவிஷீல்டும், 1,700 பேருக்கு கோவேக்சினும் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!