உலக சுற்றுலா தலமான கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் கொரோனா அச்சம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே சுற்றுலா தளங்கள் அனைத்துமே முடக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்த நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதில் தற்போது கொடைக்கானலில் மொத்தம் 24 ஆயிரம் பேர் இருப்பதாகவும் தமிழகத்திலேயே முதன்முறையாக கொடைக்கானலில் நூறு சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி முதல் தவணை செலுத்தி விட்டதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ஆய்வுகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் 50 பேருக்கு ஒரே நேரத்தில் கொடுக்கக்கூடிய ஆக்சிஜன் வசதி கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டு விரைந்து முடிக்க உத்திரவிட்டார்.
கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் மேலும் அரசு விதித்துள்ள கொரோனா விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார் ..மேலும் ஆய்வின் போது கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்..