தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன.
இதையடுத்து 31ஆம் தேதி முழு ஊரடங்கு நிறைவுபெற இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.