அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2வாரங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மே 10- 24 வரை முழு ஊரடங்கு அமலாக இருப்பதால் இன்றும் நாளையும் அனைத்து கடைகள், நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இயங்க தமிழக அரசு உத்தரவுவிட்டுள்ளது.
அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள்,தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது .
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
மே 10-24 வரை மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்கள் இடையே அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக்கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
வாடகை டாக்ஸி, ஆட்டோக்களும் மே 10 முதல் 24ஆம் தேதி வரை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மே 10-24 வரை முழு ஊரடங்கு காலத்தில் உணவகங்களில் பார்சல் வழங்கலாம்; டோர் டெலிவரிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.