தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீடிப்பா..?

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக அரசிற்கு பரிந்துரைத்துள்ளது.

17 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது .10 மாவட்டங்களில் தொற்று மிக தீவிரமாக உள்ளது. அந்த 10 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

* தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு ஒரு சில தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளது.

* தமிழகத்தில் உள்ள 142 அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

* கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளதாம்.

* அரியலூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், கரூர், தென்காசி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு மதுரை, திருப்பூர்தஞ்சாவூர் , திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு தொடரும் என தகவல் வெளிவந்துள்ளது.

* புதியதாக தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அத்யாவசிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய தளர்வுகள் வழங்கப்பட உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!