தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற ஒருவர் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற ஒருவர் கைது. வெளி மாநில லாட்டாரி  சீட்டுகளை கைபற்றி  காவல்துறையினர் விசாரணை.

       தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக பெரியகுளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் உத்தரவின் பேரில் பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெரியகுளம் வடகரை பலைய பேருந்து நிலையம் பகுதியில் சந்தேகிக்கும் படியாக இருந்த தென்கரை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை காவல்துறையினர் விசாரணை செய்த போது அவரிடம் மறைத்து வைத்திருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  வெளி மாநில லாட்டரி சீட்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர்.   இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 50க்கும் மேற்ப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ததால் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பெரியகுளம் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை சிறையில் அடைதனர்

 

Translate »
error: Content is protected !!