தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று மாலை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். செப்டம்பர் 15 க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தல்களை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.