தமிழக எல்லைக்குள் திடீரென காரை மாற்றிய சசிகலா…அதிமுக கட்சி கொடி பறக்கிறது! பெரும் பரபரப்பு

ஒசூர்,

சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில் தமிழக எல்லைக்குள் வந்துள்ளார். முன்னதாக, அவர் பயணித்த காரை திடீரென மாற்றினாரா். பெங்களூரின் புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இருந்து இன்று சென்னை நோக்கி இன்று காலை காரில் புறப்பட்டார் சசிகலா.

அவர் தனது கார் முன் பக்கத்தில் அதிமுக கட்சி கொடியை கட்டியிருந்தார். ஏற்கனவே, அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ரிசார்ட்டில் தங்க சென்ற போதும் தனது கார் முன்பு அதிமுக கொடி கட்டி இருந்தார்.

சசிகலா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் என்பதால், கட்சிக் கொடியை பயன்படுத்த அனுமதி வழங்கக்கூடாது என்று அமைச்சர்கள் டிஜிபியை நேரில் சந்தித்து சமீபத்தில் மனு அளித்திருந்தனர். கொடி விஷயத்தில் அதிமுக தலைமை மிகவும் கறார் காட்டுவதை இந்த சம்பவம் உணர்த்தியது.

இந்த நிலையில்தான், இன்று சசிகலா கர்நாடக எல்லையை தாண்டி ஓசூர் அடுத்த ஜூஜூவாடி என்ற தமிழக எல்லைப் பகுதிக்குள் வரும் போது காவல்துறையினர் அவரது வாகனத்தை மறித்து, அதிமுக கட்சி கொடியை காரில் இருந்து அகற்ற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்க உள்ளனர் என்ற தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.

சசிகலா, அதிமுக கட்சி கொடியை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் அந்த கட்சியில் உள்ள தலைமை தீவிர முயற்சி எடுத்து வருவதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது. சசிகலா, அதிமுக கட்சி கொடியை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் அந்த கட்சியில் உள்ள தலைமை தீவிர முயற்சி எடுத்து வருவதை இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது.

ஆனால் தமிழக எல்லைக்கு சில கி.மீ தூரத்திற்கு முன்பு கார் வந்தபோது அனுமார் கோவில் அருகே காரை நிறுத்திய சசிகலா, ஆஞ்சநேயரை கும்பிட்டார். பிறகு, கீழே இறங்கி, இன்னொரு எஸ்யூவி காரில் ஏறினார். அவரது கார் முகப்பிலும் அதிமுக கொடி இருந்தது.

அவர் ஏற்கனவே பயணித்த காரிலிருந்து அதிமுக கொடி நீக்கப்பட்டிருந்தது. இதை ஏன் அவர் செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக அடையாள அட்டை வைத்துள்ள ஒரு நிர்வாகியின் கார் அதுவாகும். எனவே சட்டப்படி அதில் அதிமுக கொடி இருக்கலாம். எனவே காவல் துறையினர் வழங்கும் நோட்டீஸ் நடவடிக்கையை, சசிகலா ஏற்பாரா அல்லது காவல்துறை என்ன செய்யும் என்ற கேள்விகள் எழுந்துள்ளதால் எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

 

 

 

 

 

Translate »
error: Content is protected !!