தமிழ் புத்தாண்டு… மெட்ரோ ரெயிலில் 50% கட்டணம் தள்ளுபடி

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயிலில் யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று மற்றும் நாளை 50% கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவ்வபோது மெட்ரோ ரெயில் நிர்வாகம் சலுகைகளை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரெயிலில் இன்று மற்றும் நாளை 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்சலுகை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது. இதனை மெட்ரோ ரெயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!