தவறுதலாக ரூ2100 கோடியை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தேடி வரும் இளைஞர்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வேல்ஸ் என்ற நாட்டில் இளைஞர் ஒருவர் 2100 கோடி ரூபாயை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு தேடி வருகிறார்.

2009ம் ஆண்டில் பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயம் நடைமுறையில் பயனற்றதாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வேல்ஸ் நாட்டை சேர்ந்த ஜேம்ஸ் ஹௌல்ஸ் என்ற இளைஞர் தனது கணக்கில் சுமார் 7500 பிட்காயின்களை சேமித்து வைத்திருந்திருக்கிறார்.

நாட்கள் செல்ல செல்ல அதுகுறித்து ஜேம்ஸ் மறந்து போனார். கடந்த 2013ம் ஆண்டு வேல்ஸ் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் தேவையில்லாத பொருட்களைக் கொட்டியுள்ளார். அதோடு வைத்திருந்த பிட்காயின் தொடர்பான தரவுகளைச் சேமித்து வைத்திருந்த கணினியின் வன்பொருளையும் (Hard Drive) குப்பையோடு குப்பையாகத் தூக்கி வீசியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் காலப்போக்கில் பிட்காயின் மதிப்பு அசுர வேகத்தில் உயர ஆரம்பித்தது. தற்போது 7500 பிட் காயின் மதிப்பு 220 மில்லியன் பவுண்டுகள். இந்திய மதிப்பில் சுமார் 2100 கோடி எனக் கூறப்படுகிறது. ஐயோ இப்படி அவசரப் பட்டுவிட்டோமே எனக் கதறிய ஜேம்ஸ், குப்பை கொட்டும் தளத்தின் நிர்வாகிகளுக்குக் கோரிக்கை ஒன்றை அனுப்பினார்.

ஆனால் ஜேம்ஸ் ஹௌல்ஸ்யின் கோரிக்கையை நிராகரித்த அந்த நிர்வாகிகள், எங்களால் உங்களுக்கு உதவ வாய்ப்பில்லை என கையை விரித்து விட்டார்கள். இதையடுத்து யாருடைய கையிலாவது அந்த தரவுகள் கிடைத்தால் அதை தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ள ஜேம்ஸ், அதற்காக 55 மில்லியன் பவுண்டுகள் சன்மானம் அளிக்க முன்வந்துள்ளார்.

இந்த தவறு எப்படி நடந்தது என்பது குறித்து விவரித்த ஜேம்ஸ் ஹௌல்ஸ், ‘தன்னிடம் இதேபோன்று இருவேறு தரவுகளைச் சேமிக்க வன்பொருள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் தான் தவறான ‘Hard Drive’ தூக்கி எறிந்து விட்டதாகத் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!