இந்திய ஜனநாயகக் கட்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நிறுவனருமான டி. ஆர். பச்சமுத்துவால் ஏப்ரல் 29, 2010இல் தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகும். ஊழலையும் சமூக எதிர் செயல்களையும் ஒழிப்பதே இக்கட்சியின் முதன்மை குறிக்கோளாகும். இக்கட்சியின் தலைமையகம் சென்னையில் உள்ளது. இந்தக் கட்சி 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது.
இக்கட்சி 2014 பொதுத் தேர்தலில் பாஜக–தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டது. தற்போது, கட்சிகள் கொண்ட திமுக கூட்டணியிலிருந்து இந்திய ஜனநாயக கட்சி விலகியது, ஒரு இடம் மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டதால் விலகல் என தகவல்.