திருச்சி மாநகராட்சி 52 வது வார்டில் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை களைய நடவடிக்கை எடுக்க தி.மு.க வட்ட செயலாளர் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தார்.
வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகர 52 வது வார்டு பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அந்த குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 52 வது வார்டு திமுக செயலாளர் பவுல் ராஜ் திருச்சி மாநகராட்சி தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு அளித்தார்.