தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய 28 காவல்துறையினருக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கிய எஸ்பி ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 28 காவல்துறையினருக்கு, எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த எதிரிகளை கண்காணித்து சில தினங்களிலேயே கைது செய்து திருடுபோன 4½ சவரன் தங்க நகைகள் ஆகியவற்றை மீட்டும், 28.05.2021 அன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகில் காரில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட எதிரியை கைது செய்து 1.600 கிலோ கஞ்சாவையும், ஒரு காரையும் பறிமுதல் செய்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன்,

உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், சிவகுமார், முத்துகணேஷ், தலைமை காவலர் பென்சிங், முத்தையாபுரம் காவல் நிலையம் முதல் நிலை காவலர் சாமுவேல், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் செந்தில், திருமணி, முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துப்பாண்டி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும் பாராட்டு பெற்றனர்.

கடந்த 27.05.2021 அன்று எப்போதுவென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவஞானபுரம் கிராமத்தில் அறிவழகன் என்பவரை கைது செய்து ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான 393 கிலோ அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து எப்போதுவென்றான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய உதவிய விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், முதல் நிலை காவலர், முத்துராஜ், காவலர்கள் ஜனார்த்தனன், சிங்கராஜ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும் பாராட்டு பெற்றனர்.

கடந்த 30.05.2021 அன்று குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடன்குடி பகுதியில் ரோந்து மேற்கொண்டபோது சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட ரூபாய் 2,30,000/- ஆயிரம் மதிப்பிலான 263 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை கைப்பற்றி எதிரியை கைது செய்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. மங்கையர்க்கரசி, சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை காவலர் . ஹரிதாஸ் காவலர்கள் சுந்தர்ராஜ், ஆனந்த் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும் பாராட்டு பெற்றனர்.

கடந்த 26.05.2021 அன்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறிஞ்சான்குளம் கண்மாய் அருகில் இரண்டு எதிரிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 1.500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கோவில்பட்டி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஸ்டீபன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் ராம்சுந்தர், கருப்பசாமி மற்றும் தனிப்பிரிவு காவலர் அருண் விக்னேஷ் ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 18.05.2021 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் தடுப்பணை பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அல்லுவதாக கிடைத்த தகவலின் பேரில் மணல் அள்ளிய 3 எதிரிகளையும் கைது செய்து, 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெய ராமசுப்பிரமணியன், முதல் நிலை காவலர் சதீஷ் தணிகை ராஜா, காவலர்கள் மகாலிங்கம், முகமது கோரி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும் பாராட்டு பெற்றனர்.

3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 28 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட ஏடிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

Translate »
error: Content is protected !!