தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நடிகர் ரஜினிக்கு பதில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு நடிகர் ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணைய அதிகாரி அருணா ஜெகதீசன் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஏற்கனவே 23 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 586 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 775 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடிக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூற சென்றபோது செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, போராட்டத்தில் சமூக விரோதிகள் போராட்டத்தில் உள்ளே புகுந்துள்ளனர் . தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகமாகி விட்டனர் என கூறினார்.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் ஆணையம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சம்மனை ரஜினிகாந்த் பெற்று கொண்டு உள்ளார்

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு நடிகர் ரஜினிக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

 

 

 

 

Translate »
error: Content is protected !!