தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் அவர்கள்;;, தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, கடந்த காலங்களில் பருவமழையின் மூலம் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் வெள்ள பெருக்கு உள்ளீட்ட எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளை கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்களை தொடர்ந்து கண்காணித்து, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், வெள்ளம், மழையினால் பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களை தங்க வைத்திட அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள தங்கும் இடங்களை தயார் நிலையில் வைக்கவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்திற்குட்பட்ட 99 கண்மாய்களில் 26 கண்மாய்களும், உத்தமபாளையம் பெரியாறு வைகை வடிநில உப கோட்டத்திற்குட்பட்ட 36 கண்மாய்களில் 3 கண்மாய்களும் நிறைந்துள்ளது. மேலும், பேரிடர் காலங்களில் பொது மக்களை மீட்க, நீச்சல் வீரர்கள், நாரிழை படகுகள் மற்றும் பரிசல்கள், மீட்கக் கூடிய உபகரணங்கள், மாநில பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற குழுவினர், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படின் அதற்கு தேவையான மருந்து பொருட்கள் மற்றும் உணவுப்பொருள்கள், பொதுமக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், காலி சாக்கு பைகள் ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிப்புகள் ஏற்படக்கூடிய முல்லைபெரியாறு நீர் பிடிப்பு பகுதிகள், ஆற்றங்கரைப்பகுதிகள், நீர்நிலைகளில் வசிக்கின்ற பொதுமக்கள் கவனமுடன், முன் எச்சரிக்கையுடன் இருக்கவும், குறிப்பாக எதிர்பாரத விதமாக மலைச்சாலைக்களில் மண் சரிவு ஏற்படின், அதனை உடனடியாக சீர்செய்யும் பணிகளை மேற்கொள்ளவும், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றிட மர அறுவை இயந்திரம், ஜே.சி.பி போன்ற இயந்திரங்கள், மின் கம்பங்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரங்களை தயார் நிலையில் வைக்கவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும், 04546-261093 என்ற எண்ணிலும் தெரிவிப்பதற்கு பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருவதைப்போல், பேரிடர்காலங்களிலும் தங்களது பணியினை ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொண்டு, பொதுமக்களை பாதுகாத்திட உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மணி, துணை காவல் கண்காணிப்பாளர்கள், பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்;, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி, ஊராட்சி உள்ளீட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.