பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு இளம் நடிகரின் படத்தை இயக்க உள்ளாராம்.
முன்னனி இயக்குனர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால் திடீரென அப் அப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து தளபதி 65 படத்தை இயக்க நெல்சன்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனி படத்தை இயக்க உள்ளார் என தகவல் வெளிவந்துள்ளன. நடிகர் ராம் பொத்தினேனிக்கு கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார் என கூறப்படுகிறது.