தேனியில் ஆடம்பரம் இன்றி நடத்தப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் விழா

ஆடம்பரம் இன்றி நடத்தப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் விழா. 82 பயனாளிகளுக்கு 20 லடசம் ரூபாய் மதிப்பிலான தாலிக்கும் தங்கம் மற்றும் நிதி உதவியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைதுறையால் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் 2018 – 2019ஆம் ஆண்டில் சமூகநலத்துறையால் வழங்கப்பட்ட வேண்டிய தாலிக்கும் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று 82 பயனாளிகளுக்கு 20 லடசத்தி 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி வழங்கப்பட்டது. தேனி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையினரால் வழங்கப்பட்ட இந்த விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்  மற்றும் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

கடந்த ஆட்சியில் இது போன்று நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்சி மாவட்ட அளவில் அனைவரையும் ஒன்றினைத்து பெரிய தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பெரிய அளவில் விழா போன்று நடத்தி நலத்திட்டங்கள கொடுப்பது வழக்கமாக இருந்த நிலையில் தற்பொழுது உள்ள ஆட்சியில் செலவுகளை குறைப்பதற்காக  எந்த ஆடம்பரம் இன்றி அந்த அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நலத்திட்டங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் ஆடம்பரம் இன்றி நலத்திட்டங்கள் அதிகாரி மற்றும் சட்டமன்ற உறுப்பினை கொண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!