தேனியில் கொரோனா தப்புபூசி ஒத்திகை – மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் முன்னிலையில் நடைபெற்றது

கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஊசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் முன்னிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் (08.01.2021) நடைபெற்றது

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தாவது.கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று நோயினை தடுக்கும் வகையில் கொரோனா  தடுப்பூசி அனைவருக்கும் வழங்குவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தமிழக அரசால்  எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்போது ஐந்து கட்டங்களாக வழங்கப்பட உள்ளது. முதற் கட்டமாக அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 7354 மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது

இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60-வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கும், நான்காம் கட்டமாக 60-வயதிற்கு உட்பட்ட இன நோய்கள் உள்ள நபர்களுக்கும் மற்றும் ஐந்தாம் கட்டமாக பொதுமக்களுக்கும், மேற்காணும் 4 கட்ட பிரிவுகளின்படி வராமல் விடுபட்ட நபர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

இந்த ஒத்திகையில் கோவிட்-19 தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்போது பணியாளர்களின் பயனாளி பட்டியல் கணினியில் பதிவேற்றம் செய்வது, எவ்வாறு தடுப்பூசி வழங்குவது, தடுப்பூசி அறைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை, வீரபாண்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்,

தேனி பொம்மையகவுண்டன்பட்டி நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் Nசுவு தனியார் மருத்துவமனை என ஐந்து இடங்களில் தலா 25 நபர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்குவதற்கான முழு ஒத்திகை (08.01.2021)மேற்கொள்ளப்பட்டது

மேலும், கோவிட்-19 தடுப்பூசி மருந்து நமது மாவட்டத்திற்கு அரசால் வழங்கப்படும் போது தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மாவட்டத்திலுள்ள 6 அரசு மருத்துவமனைகள், 41 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் என மொத்தம் 49 இடங்களில் குளிர்சாதன பெட்டகங்களில் இருப்பு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. என தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ், அவர்கள் தெரிவித்தார்இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர்.செந்தில்குமார்மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்.இளங்கோ, மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து

 

Translate »
error: Content is protected !!