தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி காவலர்களுக்கு உடையுடன் அணிந்த கேமரா வழங்கினார்

தேனி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளின் போது ஏற்படும் பிரச்சனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு போக்குவரத்து காவலர்கள் மற்றம் இருசக்கர ரோந்து வாகன காவலர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி அவர்கள் உடையுடன் அணிந்த கேமரா (Body Worn Camera) – 20 குற்ற  நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டும்,

பொய் குற்றச்சாட்டுகளை தவிர்க்கவும் வீடியோ மற்றும் கேமராவுடன் கூடிய 20 கேமிராக்கள் தேனி மாவட்டத்தில் பணிபுரியும் 5 உட்கோட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் குடிபோதையில் வாகன ஓட்பவர்களை எளிதாக கண்டறிய சுவாச பகுப்பாய்வு கருவி (Breath Analyzer) – 05 Nos வழங்கப்பட்டது.

இரவு ரோந்து மற்றும் போக்குவரத்து பணியின் போது ஒளிரும் தோள்பட்டை ஒளிவிளக்குடன் பணிபுரிய (Shoulder Light) – 102 Nos வழங்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு ஒலிபெருக்கி (Mega Phone) – 10 Nos  ஆகிய பொருட்கள் உள்ளடங்கிய பாதுகாப்பு 

உபகரணங்கள் காவல் கண்காணிப்பாளர் சாய்சரண்  தேஜஸ்வி அவர்கள்  காவலர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!