தேனி ரயில் நிலையம் கட்டுமானப் பணிகள் – ரயில்வே நிலைக் குழு உறுப்பினர் ஆய்வு 

மதுரை போடி அகல ரயில் பாதை திட்டத்திற்கான உசிலம்பட்டி ஆண்டிபட்டி ரயில்வே நிலையம், தேனி ரயில் நிலையம் கட்டுமானப் பணிகளை மதுரை மக்களவை உறுப்பினரும், ரயில்வே நிலைக் குழு உறுப்பினர்ஆய்வு 

தேனி மாவட்டம்  தேனியில் மதுரை போடி அகல ரயில் பாதை திட்டத்திற்கான பணிகளை மதுரை மக்களவை உறுப்பினரும், ரயில்வே நிலைக் குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன்  ஆய்வு செய்து அதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் கடந்த வாரம் மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரை ரயில் சோதனை ஓட்டம் முடிவற்றது. மேலும் ரயில்வே பொதுமேலாளர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் வருகின்ற ஏப்ரல் மாதத்திற்குள் தேனி வரையிலான சோதனை ஓட்டமும் செப்டம்பர் மாதத்திற்குள் போடி வரையிலான சோதனை ஓட்டம் முடிவடைந்துவிடும் என்று உறுதி அளித்து கடிதம் எழுதியுள்ளார்.

தேனி வரை பணிகள் முடிந்து விட்டாலே ஏப்ரல் மாதத்தில் ரயிலை இயக்கி விடலாம் என்று எண்ணியுள்ளோம். மேலும் இந்த பாசஞ்சர் ரயில் போடி மதுரையோடு நின்று விடக்கூடாது என்றும் சென்னையிலிருந்து வரும் ஏதேனும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலையும் இந்த திட்டத்தில் இணைத்து சென்னையிலிருந்து போடி வரை அல்லது தேனி வரையிலாவது அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேனியில் இருந்து நாகர்கோவில் பேஸஞ்சர் ரயில் திட்டமும் இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக உள்ளது என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!