தேனி வருசநாடு அருகே செந்நாய்கள் கூட்டம் தாக்கி 11 வெள்ளாடுகள் பலி.. 12 ஆடுகள் மாயம் – வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவருக்கு  சொந்தமான தோட்டம் வருசநாடு பஞ்சந்தாங்கி மலை அடிவாரத்தில் உள்ளதுதனது தோட்டத்தில் 23 வெள்ளாடுகளை தொழு வைத்து வளர்த்து வருகிறார்.

இன்று  வழக்கம் போல காலை தொழக்குச் சென்று பார்த்த போது உடலில் காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 23 ஆடுகளில் 11 ஆடுகள் இறந்த நிலையில் மீதமுள்ள 12 ஆடுகளை காணவில்லை. இதுகுறித்து சிதம்பரம் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தார். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்த காலடி தடங்களை வைத்து, வனப்பகுதியில் இருந்து செந்நாய்கள் கூட்டம் வந்து ஆடுகளை தாக்கியிருக்கலாம் என்று கூறுகின்றனர்அதே நேரத்தில் கால்நடை மருத்துவர் பிரேத பரிசோதனை செய்த பின்னர் தான் ஆடுகளை தாக்கியது செந்நாய்கள் கூட்டமா? அல்லது வேறு ஏதேனும் மிருகமா? என்பது தெரியவரும். இறந்த ஆடுகளின் மொத்த மதிப்பு 1.50 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தோட்டத்தில் மேய்ந்த 23 ஆடுகளையும் செந்நாய்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!