தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அதிகாலை 3:30 அளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் விஜயகாந்த் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.