சிஐடியு, எஐடியு, எல்பிஎஃப், எஐடியுசி, டியுசிஐ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம், பொதுத்துறைகளை தனியார் மயம், தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்ட திருத்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக்க்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சிஐடியு, எஐடியு, எல்பிஎஃப், எஐடியுசி, டியுசிஐ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள், புதிய மின்சார திருத்த சட்டம், பொதுத்துறைகளை தனியார் மயம் ஆக்குவது, புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு எதிர்பு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்களை திரும்ப பெறக் கோரி சுதந்திரம் பெறுவதற்காக 1942 ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரபிக்கப்பட்டது போன்று மக்கள் விரோத போக்கை கொண்டுள்ள மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து மோடியே வெளியேறு இயக்கம் ஆரபித்து புதிதாக கொண்டு வந்த சட்டங்களை திரும்ப பெறகோரி பெருந்திரள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் தொழிற்சங்கங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.