தொழிற்சாலை பணியாளர்கள் அலுவலகம் செல்ல ‘இ’-பதிவு கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் கொரோனா 2ம் அலை தீவிரமடைந்ததன் காரணமாக நாளை முதல் தளர்வுகள் இல்லாத கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் தடையின்றி செயல்பட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அனுமதி வழங்கியுள்ளார். இந்நிலையில் மே 25ம் தேதி முதல் தொழிற்சாலை பணியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம்:

* மே 25 முதல் தொழிற்சாலை பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.

* மே 25 முதல் தொழிற்சாலைகளின் வாகனங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

* மே 25 முதல் தொழிற்சாலைகள் பதிவு செய்துள்ள வாகனங்களில் மட்டுமே பணியாளர்களை அழைத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* தொழிலாளர்களை அழைத்து வர 4 சக்கர வாகனங்களை ஏற்படுத்துக் கொள்ளவும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!