நடிகர் விஜய் நடித்த வரும் படம் “பீஸ்ட்”. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படமும் அதே ஸ்டுடியோவில் படமாக்கப்படுகிறது.
அப்போது மகேந்திர சிங் தோனி பீஸ்ட் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகின.
இந்நிலையில், மதுரை சேர்ந்த ரசிகர்கள் மதுரையில் ஆளப்போகும் மன்னர்கள் என்ற பெயரில் தோனியை பிரதமர் என்று, விஜய்யை முதல்வர் என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். மேலும் இந்த சந்திப்பை அரசியல் விதமாக ஆகும் செயலாக இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.