நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் அதிக விலைக்கு விற்றால் அனுமதி ரத்து

நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்களின் விலையை உயர்த்தி விற்றால் அனுமதி ரத்து என்று தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் எச்சரித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இந்த நடைமுறை அமலில் உள்ளது.

அதற்கான அனுமதிச் சீட்டு தோட்டக்கலைத்துறை, மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் வழங்கப்படுகிறது. காய்கறி மற்றும் பழ வகைகள் தரமற்றதாகவும், விலையை உயர்த்தியும் விற்பனை செய்வது தெரியவந்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என, மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!