பிரபல கன்னட நடிகர் யாஷ் திரைப்பட தொழிலாளர்களுக்கு கொரோனா நிதியாக ஒன்றரை கோடி வழங்கியுள்ளார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் யாஷ். கே ஜிஎப் படத்தின் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் இரண்டாம் மாகம் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா வால் படப்பிடிப்பின்றி தவிக்கும் 3000 தொழிலாளர்களுக்கு நடிகர் யாஷ் தன்னால் முடிந்த வரை ஒவ்வொரு நபர்களுக்கு 5000 வீதம் மொத்தம் ஒன்றரை கோடி தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கியுள்ளார். இந்த கொரோனா காலத்தில் வலி மற்றும் இழப்புகளை சந்தித்திருக்கும் அவர்களுக்கு இந்த தொகை தீர்வாகாது என்றாலும் நம்பிக்கையாக இருக்கும் என யாஷ் தெரிவித்தார்.