மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார்.
இன்று அதிகாலை 4.30 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விவேக் நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
விவேக்கின் குடும்ப உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மயக்க நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.. நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விவேக்கின் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் , எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.. விவேக்கிற்கு முழுக்க முழுக்க இதயம் தொடர்பான பிரச்சனைதான் உள்ளது. விவேக்கிற்கு கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உயிரைக்காக்க மருத்துவர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.