** மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு நடிகர் சூர்யா குடும்பத்துடன் நேரில் அஞ்சலி செலுத்தினார். நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்திக் ஆகியோர் சென்னை விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
**அய்யோ ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டாரே..! நடிகர் விவேக் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். திரையில் இனி பகுத்தறிவுக்குப் பஞ்சம் வந்துவிடுமே என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
** நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்லாது, சமூகத்திற்கே பேரிழப்பு – நடிகர் ராகவா லாரன்ஸ்
** விவேக் நல்ல நடிகர் மட்டுமல்ல; நல்ல மனிதர். அவரை நாம் இழந்துவிட்டோம் – நடிகர் யோகி பாபு
** நடிகர் விவேக்கின் மறைவுக்கு கோடிக்கணக்கான மரங்களும் கண்ணீர் சிந்தும் – நடிகர் சூரி
** Miss u sir.. உங்களது மரணம் எங்களுக்கு பேரிழப்பு; வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை -இயக்குநர் அட்லி
** அவர் நட்ட பல லட்சம் மரங்கள் கூட அவரை நினைத்து வாடும்!” – நடிகர் நாசர்
** எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் – இயக்குநர் சேரன்
** நாங்கள் கஷ்டப்படும் காலத்தில் இருந்து நெருக்கிய நண்பர்கள் – ரமேஷ் கண்ணா
** “எண்ணங்கள் மற்றும் மரங்களை நட்டமைக்கு நன்றி ” -நடிகர் பிரகாஷ் ராஜ்
** மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய திறைமைசாலியை இழந்துள்ளோம் – பொன்ராஜ்
** சமூக செய்தியை தனது நகைச்சுவை நடிப்பு மூலம் இணைத்த சமகால சிறந்த நடிகர் விவேக் – இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
** பொதுப்பணிகளில் ஆர்வம் மிகுந்த எனது மாணவரான நடிகர் விவேக்கின் இழப்பு ஈடு செய்ய இயலாதது – சாலமன் பாப்பையா இரங்கல்.