நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: கடைகளில் அலை மோதிய மக்கள் கூட்டம்

தமிழகத்தில் நாளை முதல் 7 நாட்களக்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல் படுத்தப் படுவதால், பொதுமக்கள் பொருட்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக நேற்று மதியம் முதல் இன்று இரவு 9 மணி வரை மட்டும் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.

இதன் காரணமாக இன்று கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. இறைச்சிக்கடைகள், மீன் கடை, காய்கறி கடை மற்றும் ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கிச்சென்றனர். காசிமேடு மீன் மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.

சென்னை திநகர், பாரிமுனை, கொத்தவால்சாவடி, பெரம்பூர், அயனாவரம், வண்ணாரப்பேட்டை, அடையாறு, திருவான்மியூர் உள்பட சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சிறிய துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டீ கடைகள் உள்ளிட்ட கடைகளும் திறக்கப்பட்டன. அதே சென்னை ரிச்சி தெருவில் உள்ள செல்போன் கடைகள், கம்ப்யூட்டர் மற்றும் லேப்-டாப் கடைகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கடைகளும் திறக்கப்பட்டன. புதுப்பேட்டையில் உள்ள மோட்டார்சைக்கிள்கள் மற்றும் கார்களின் உதிரி பாகங்கள் விற்பனை கடைகளும் திறக்கப்பட்டன. இதனால், நேற்று பிற்பகலில் சென்னை சாலைகளில் மீண்டும் வாகனங்கள் நிறைந்து சென்றதை பார்க்க முடிந்தது. சில கடைகளில் மட்டும் மக்கள் வரிசையில் நின்று சமூக இடைவௌியை பின்பற்றினர். பெரும்பாலான கடைகளில் லாக்டவுன் விதிகள் காற்றில் பறந்தன.

சென்னை மட்டுமின்றி கோயம்புத்துார், மதுரை, திருப்பூர், நெல்லை, ஈரோடு உள்ளிட்ட மார்க்கெட் மற்றும் கடை வீதிகளிலும் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். கடைகள் திறப்பு, பேருந்துகள் இயக்கம் போன்றவற்றால் இன்று தமிழகம் முழுவதும் முக்கிய சாலைகள் வழக்கம் போல் பரபரப்பாக காணப்பட்டது.

Translate »
error: Content is protected !!